School photos

கமு/ கண்ணகி இந்து வித்தியாலய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் வைபவம். கமு/ கண்ணகி இந்து வித்தியாலய பழைய மாணவர்களான T. தயானந்த் (சவுதி அரேபியா), R. பிரதீபராஜ் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் நிதி உதவியுடன் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் வைபவம் 13 - 09 - 2011 அன்று பாடசாலையின் அதிபர் திரு. K. யோகராஜா தலைமையில் நடைபெற்றது. இவ் விழாவை பாடசாலையின் ஓய்வு பெற்ற ஆசிரியை திருமதி. V. புவனராஜா மற்றும் பழைய மாணவரான செல்வி. N. சுதாமதி ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்தனர். இவ் விழாவிற்கு பிரதம அதிதிகளாக திருமதி. V. புவனராஜா (ஓய்வு பெற்ற ஆசிரியை), திரு. S. பாஸ்கரன் (பிரதேச சபை உறுப்பினர்), திரு. Y. கோபிகாந்த் (பிரதேச சபை உறுப்பினர்) திரு. T. ரமணன் (பழைய மாணவர் சங்க பிரதிநிதி) ஆகியோரும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.