அழகே உருவான- எங்கள்
ஆசை அம்மா-அம்மம்மா
அறுபது வருடங்களுக்கு மேலாக,
பழுத்த சுமங்கலியாய் வாழ்ந்து
வாழ்ந்து பல நற்கருமங்கள் ஆற்றினிரே
எங்கள் குடும்பத்துக்கு மட்டுமின்றி
கோயிலார் பரம்பரைக்கே- இருந்த
ஒரே ஒரு தலை மரம் நீ
இன்று அடியோடு சாய்ந்ததென்ன?
உங்கள் பஜனைகளும் சேவைகளும்
உங்களை புனிதவதியாக்கிற்று.
உங்கள் பரம்பரையே ஊரின்அரைவாசியாயிற்றே
எட்டு பிள்ளைகளை பெற்று -பன் மடங்காய்
பேரப்பிள்ளைகளைக் கண்டு -வளர்த்துவிட்டு
உன் வேரின் கிளைகளாய் பூட்டபிள்ளைகளும் கண்டுவிட்ட
பாக்கியசாலி நீ -தாயே ......
யாருக்கம்மா கிடைக்கும் இந்த
அரும்பெரும் பேறு......
எனதும் என் பிள்ளைகளின்
வாழ்வும்உன்னோடுபின்னிபிணைந்ததம்மா
நீயின்றி ஏது எமக்குநினைவுகளும் கனவுகளும்.
எனது துக்கங்கள் அனைத்திலுமே
அருந்துணை யாய் நின்றயம்மா ......
காலனிடம் நீ போராடும் போது
எங்கு போனோம் அம்மா! நாங்கள்
உனக்கு உற்ற துணை செய்யாமல்.
உனது கன்னங்கள் தடவிட
கைகள் கிடந்து துடிக்கிறதே.
உனது பாதம் கழுவி கண்ணில் ஒற்ற
மனம் கிடந்து தவிக்கிறதே.
கட்டிலை சுற்றிநின்று ஒப்பாரி வைத்திட
நெஞ்சுபதைபதைக்கின்றதே.
கடல் கடந்து நின்று தவிக்கிறோமே
நானும் என் பிள்ளைகளும்.
ஆறுதலாக ஒரு வார்த்தை சொல்ல
ஒருமுறை நீ வாராயோ?.....
கட்டி முத்தம் தந்துவிட
உன்கன்னம் தாராயோ?....
அம்மா,அம்மம்மா ,பாட்டி என்று
நாங்கள் விடும் ஓலம்
உன் காதில் விழுகிறதா ?
உன் நெஞ்சைத்தொடுகிறதா?
உள்ளம் முழுவதும்எங்களையேசுமந்துகொண்டு
தொடங்கிவிட்டாய உன்
தூரப் பயணத்தை-தவிக்கிறோமே நாங்கள்
இங்கு துடிக்கிறோமே.
என்றாலும் நூற்றாண்டை தொட்டுவிட்ட
உனது வாழ்வு பூரண வாழ்வம்மா-
யாருக்கும் அமையாது இந்தக்
கொடுப்பனை தானம்மா.....
ராஜமாதாவாக வாழ்ந்துவிட்ட
"ராஜம்மா" நீயம்மா.....
மறுமையிலும் கூடநீ-
ராஜம்மா தானம்மா
மறுமையிலும் கூடநீ
ராஜம்மா தானம்மா....
மகள்-இராஜேஸ்வரிஇராஜேஸ்வரன்
பேரப்பிள்ளைகள்-இன்பரதி- நேசராஜா
இராதிகா- ஜெகதீபன்
இந்துஷா-இமயவன்
இராஜேஹரீஷ்
பூட்டப்பிள்ளைகள்-மிதுஷனா
அஷ்வின்
கவினார்ஷ்
மதுரிஷா
ஷயுரிஷா