அமரர் கைலாயபிள்ளை கிருபேந்திரா ஞாபகார்த்த கடினபந்து கிரிகட் சுற்றுப்போட்டியின் அனைத்து குழுநிலை போட்டிகளும் சிறப்பாக நிறைவு பெற்றுள்ள வேளையில் காரைதீவு விளையாட்டுக்கழகத்தின் சுற்றுப்போட்டி ஏற்பாட்டுக்குழுவினால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள விபரங்கள் வருமாறு சுற்றுப்போட்டியில் அணிகள் கலந்து கொண்ட A,B,C ஆகிய குழுக்களில் நிகர ஓட்ட விகித அடிப்படையில் குழுநிலையில் 1ம்,2ம் நிலைகளைப்பெற்ற அணிகள் கால் இறுதி ஆட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை குழு D இல் நிகர ஓட்ட விகித அடிப்படையில் முதல் நிலையில் உள்ள Eleven Heroes அணியும், போட்டி ஒன்றின்போது இடம்பெற்ற தவறான கருத்துப்பரிமாறறம் காரணமாக சுற்றுப்போட்டி ஏற்பாட்டுக் அணியான காரைதீவு விளையாட்டுக்கழகம் குழுநிலையில் 2ம் நிலையில் இருந்தும், குழுநிலையில் 3ம் நிலையிலுள்ள காரைதீவு விவேகாநந்தா விளையாட்டுக்கழகத்தை முழு மனதுடன் அனுமதித்ததன் காரணமாக குழு D இல் விவேகாநந்தா விளையாட்டுக்கழகம் இரண்டாவது அணியாக கால் இறுதி ஆட்டத்துக்கு தெரிவாகியுள்ளது. இம்முடிவை ஆதரித்த எமது கழக வீரர்களுக்கும், கழக உறுப்பினர்களுக்கும், கழக அபிமானிகள் மற்றும் நலன்விரும்பிகளுக்கும் கழகத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். தகவல், தலைவர்,செயலாளர் காரைதீவு விளையாட்டுக்ழகம் விபுலாநந்தா சனசமூக நிலையம்