KSC
இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இடம்பெறும் இளைஞர் கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டியில் காரைதீவு பிரதேச செயலக இளைஞர் கழக கூடைப்பந்தாட்ட அணியானது தேசிய மட்ட போட்டிகளுக்கு தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தெரிவு தெரிவாகியுள்ளது. மாவட்ட மட்டத்தில் போட்டிகளில் இறுதியாக இடம்பெற்ற கல்முனை பிரதேச செயலக இளைஞர் கழக அணியை 49-28 புள்ளிகள் அடிப்படையில் சிறப்பாக வெற்றிபெற்றதன் மூலம் அம்பாறை மாவட்டம் சார்பாக அடுத்தமாதம் கொழும்பில் இடம்பெறவுள்ள தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.