முப்பத்தொராம் நாள்
நினைவுத்துளிகள்
நாட்கள் 31
ஆகிவிட்டதாம்
நீங்கள் காற்றோடு கலந்து
நம்பமுடியவில்லை அம்மம்மா
வாழ்கிறீர்கள் எம்முடன் எப்போதும்
உணர்கிறோம் எங்களில் உங்களை ,
பச்சை நிற சாறீயுடன்
தலை சாய்த்து ஒரு கை வீசி
நடக்கும் நடையும்,
எம்மை கண்டதும் ஒளி வீசும்
உங்கள் கண்களும்,
பாட்டு பாடி எமை செல்லமாய்
வரவேற்கும் இதழ்களும்,
என்றென்றும் எங்கள் கண்மணிக்குள்
வற்றாமல் வாரி வாரி
வழங்கிய உங்கள் பாசமும் ,
அள்ளி அள்ளி வீசிய அன்பு முத்தங்களும்
அணைப்புகளும்,இனிப்புகளும் கூட
எப்போதும் எங்கள் இதயத்தினுள்
தெரு பார்த்து சாய்மனை கதிரையில்
சாய்ந்திருக்கும் அழகும்எந்நேரமும் செய்யும்
பூஜைகளும் செல்லமாய் பிடித்த சண்டைகளும்
உற்சாகம் அளித்த ஊடல்களும்
பாராபட்சம் பார்க்காத பண்பும்
எங்கள் நினைவுகளில் இருக்கும் வரை
இப்போதும் வாழ்கிறீர்கள் எம்முடன் எம்மில்
உங்கள் உயிரின் உயிரான
பேரபிள்ளைகளும் பூட்ட பிள்ளைகளும்